இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து எழுந்தருளச் செய்யப்பட்ட புனிதச் சின்னங்கள் கண்காட்சி 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமயவில்

exhibition-of-relics-from-gujarat-india-at-gangarama-from-4-to-11

இந்திய அரசின் முழு அனுசரணையின் கீழ், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் சர்வக்ஞ தாதுக்கள், இந்நாட்டு மக்கள் வழிபடுவதற்காக ஒரு சிறப்பு கண்காட்சியை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இந்த தாதுக்கள் தீவுக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், அன்றிலிருந்து பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் இந்த தாது கண்காட்சி நடைபெறும்.

கடந்த காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக, இந்நாட்டு மக்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.




எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வக்ஞ தாதுக்கள் கொண்டுவரப்படவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் 3.00 மணி முதல் பொது மக்கள் தாதுக்களை வணங்குவதற்கு வாய்ப்பு திறக்கப்படும். இந்த புண்ணிய காரியத்தை அரச அனுசரணையின் கீழ் முறையாக ஒழுங்கமைக்கும் நோக்குடன், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் நேற்று (18) பிற்பகல் கொழும்பு கங்காராம விகாரைக்குச் சென்று ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கு, கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரை சந்தித்த அமைச்சர், அவரது அறிவுரையின்படி எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவது குறித்து கலந்துரையாடினார்.

குறிப்பாக, இந்த தாது வழிபாட்டிற்கு வரும் ஏராளமான பக்தர்களுக்காக வழங்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது குறித்து இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இந்த ஆய்வு விஜயம் மற்றும் கலந்துரையாடலில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹர்ஷ பண்டார அவர்களும் கலந்துகொண்டார். இதற்கு முன்னர், கடந்த 17 ஆம் திகதி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி அவர்களும் மல்வத்து மற்றும் அஸ்கிரி உப்பய மகா விகாரைகளின் மகாநாயக்க தேரர்கள் இருவரையும் சந்தித்து இந்த தாது கண்காட்சி குறித்து அவர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post