குடிகார சாரதியொருவர் ஏற்படுத்திய விபத்தில் அசோக ரன்வலவின் வைத்திய மனைவியார் மருத்துவமனையில்

dr-indrani-ranwala-car-accident

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வலவின் மனைவி வைத்தியர் இந்திராணி ரன்வல செலுத்திச் சென்ற கார் இன்று (17) அதிகாலை விபத்துக்குள்ளானதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களனி - பியகம வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.




பண்டாரவத்தையிலிருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி, தான் செலுத்தி வந்த காரை வீதியின் வலதுபுற ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் திருப்புவதற்கு முயற்சித்தபோது, களனியிலிருந்து பண்டாரவத்தையை நோக்கிச் சென்ற புரோட்டன் ரக கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து இடம்பெற்ற நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி ஒரு இசைக்குழுவின் லீட் கிட்டார் வாசிப்பாளர் என்பதுடன், பியகம பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை வடக்கு, ஜாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும், விபத்து இடம்பெற்ற நேரத்தில் அவர் மது அருந்தியிருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.




கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.ஏ.கே.எம். விஜேசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் உபாலி (34895) உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

dr-indrani-ranwala-car-accident

dr-indrani-ranwala-car-accident

Post a Comment

Previous Post Next Post