லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது உற்பத்திப் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளதாக நேற்று (01) அறிவித்தது.
அதன்படி, 12.5 கிலோ லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை 4,250 ரூபாயாக உள்ளது, இது 150 ரூபாய் அதிகரிப்பாகும்.
மேலும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையும் 65 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,710 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.