ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்தார். ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று ஆசீர்வாதம் பெறுவதே இதன் நோக்கம்.
தலதா மாளிகைக்கு சென்று வழிபட்ட பின்னர், ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக நெத் நியூஸ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, தலதா மாளிகைக்கு வழிபட வந்திருந்த பக்தர்களுடன் ஜனாதிபதி ஒரு குறுகிய உரையாடலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.